2025ஆம் ஆண்டு அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு அமைச்சர் உறுதி


அரச துறை ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு 2025 ஆம் ஆண்டு கட்டாயம் மேற்கொள்ளப்பட வேண்டும் என தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.  

இன்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். பொதுமக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளைத் தணிக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதை வலியுறுத்தும் வகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.  

அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விளக்கிய பேராசிரியர் ஜயந்த கூறியதாவது:  

“வேண்டுமானால் இப்போது பொருளாதாரம் சரிந்துவிட்டது... இன்னும் கொஞ்சம் பொறுங்கள்... பெல்ட்டை இறுக்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கலாம். 2026ல் செய்வோம் என்றும் வாதிடலாம்.ஆனால் அதை செய்ய மாட்டோம். மக்கள் படும் கஷ்டங்கள் எங்களுக்கு தெரியும்.நிச்சயம் சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். அந்த விவரங்களை பட்ஜெட்டில் தாக்கல் செய்வேன்,'' என்றார்.
புதியது பழையவை