இந்திய விஜயத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி நாடு திரும்பினார்


இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நேற்று (17) நாடு திரும்பியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்த விஜயத்தை மேற்கொண்டார். 

இந்த விஜயத்தின் போது, ​​இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அரசாங்க அமைச்சர்கள் மற்றும் முன்னணி இந்திய வர்த்தக அதிபர்களுடன் ஜனாதிபதி பல இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

ஜனாதிபதியுடன் சென்ற தூதுக்குழுவில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்குவர்.

---ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு---

புதியது பழையவை