NPP பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகுதிகளை சரிபார்க்க தெரிவுக்குழுவை நியமிக்கும் திட்டம்


தேசிய மக்கள் சக்தியை (NPP) பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமைகளை சரிபார்க்க தெரிவுக்குழுவொன்றை அமைப்பதற்கு பரிந்துரைக்கும் பிரேரணையை சமர்ப்பிக்க ஐக்கிய தேசியக் கட்சியும் (UNP) புதிய ஜனநாயக முன்னணியும் (NDF) தீர்மானித்துள்ளன.

இது தொடர்பான பிரேரணை பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

புதியது பழையவை