இறக்குமதி செய்யப்பட்ட அரிசி கையிருப்பு சந்தைக்கு வெளியிடப்பட்டுள்ளது


தனியார் இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி கையிருப்பு சந்தைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று (11) நாட்டிற்கு வந்த முதலாவது அரிசி சுங்கத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூர் சந்தைகளில் தற்போதுள்ள பல அரிசி வகைகளின் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, 2024 டிசம்பர் 20 வரை, இறக்குமதி கட்டுப்பாட்டு அனுமதியின்றி அரிசியை இறக்குமதி செய்ய அனுமதிக்கும் முன்மொழிவுக்கு, டிசம்பர் 03 அன்று, அமைச்சர்கள் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

அதன்படி, இறக்குமதியாளர்கள் அரிசியை இறக்குமதி செய்ய ஆரம்பித்துள்ளதுடன், நேற்று 75,000 கிலோகிராம் அரிசி சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பா மற்றும் வெள்ளை கச்சா அரிசி இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றும் (12) நாளையும் (13) கூடுதலான அரிசி ஏற்றுமதி நாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இறக்குமதி செய்யப்பட்ட அரிசி சந்தைக்கு வருவதன் மூலம் நாட்டின் அரிசி தட்டுப்பாடு தீர்க்கப்படும் என லங்கா சதொச தலைவர் டொக்டர் சமித்த பெரேரா தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சமித பெரேரா இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தொழிலதிபர் சந்திரலால் குணசேகர, தனது கடைகளுக்கு அரிசி வழங்குவது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக குறிப்பிட்டார்.
புதியது பழையவை