மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்கள் தனியார் கல்வி வகுப்புகளை நடத்துவதற்கு தடை விதித்து மாகாண கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்துவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
சுற்றறிக்கை தொடர்பில் ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டதையடுத்து மேல் மாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் கடந்த வெள்ளிக்கிழமை (20) வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் ஆசிரியர்கள் தமது சொந்த பாடசாலைகளில் இருந்து மாணவர்களுக்கு கட்டணத்துடன் கல்வி வகுப்புகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுற்றறிக்கை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த கவலைகள் மற்றும் ஆட்சேபனைகளை மேற்கோள் காட்டி, தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, இடைநிறுத்தத்தை உறுதிப்படுத்தினார்.