கிரந்துருகோட்டே அங்கல ஓயா பகுதியில் சட்டவிரோதமான முறையில் தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட மூவர் பொலிஸாரால் நேற்று (23) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிரந்துருகோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் 29 மற்றும் 38 வயதுடைய கிரந்துருகோட்டே பகுதியைச் சேர்ந்தவர்கள்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரந்துருகோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.